கன்னியாகுமரி, டிச. 24 –
விஜய் வசந்த் எம்.பி கிறிஸ்துமஸ் வாழ்த்து:
ஒற்றுமை, சகோதரத்துவம் வலுப்படுத்தும் காலமாக அமைய வேண்டும். அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.
அன்பு, சமாதானம், தியாகம் மற்றும் மனிதநேயம் ஆகிய உயரிய மதிப்புகளை உலகிற்கு போதித்த இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளான இந்த இனிய கிறிஸ்துமஸ் திருநாளை உங்கள் அனைவருடனும் கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த திருநாள், அனைத்து வேறுபாடுகளையும் தாண்டி, ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் பரஸ்பர மரியாதையை வலுப்படுத்தும் காலமாக அமைய வேண்டும். கன்னியாகுமரி மாவட்டம் எப்போதும் மத நல்லிணக்கம், பண்பாட்டு ஒற்றுமை மற்றும் மனிதநேயத்திற்கான முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறது என்பதில் நமக்கு பெருமை.
இந்த கிறிஸ்துமஸ், உங்கள் குடும்பங்களில் ஆரோக்கியம், அமைதி, மகிழ்ச்சி மற்றும் வளமை நிறைந்த நாட்களை கொண்டு வர வாழ்த்துகிறேன். கிறிஸ்து ஏசு நம் அனைவர் மனதிலும் பிறக்க வாழ்த்துகிறேன். விஜய் வசந்த், எம்.பி., கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர்



