கம்பம்.
தேனி மாவட்டம் கம்பத்தில் தமிழக வெற்றி கழக தலைவர் தளபதி விஜய் 50வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு நிர்வாகிகள் சிறப்பு அர்ச்சனை செய்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.தேனி ஆர்.எஸ். பிரகாஷ் அவர்களின் அறிவுறுத்தலின்படி கம்பம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் சாய் பிரசாத் ,கம்பம் பாபு ஆர். . ஆர்.சூர்யா,தினேஷ் பாபு தலைமையில் கம்பம் கௌமாரியம்மன் கோவிலில் நிறுவன தலைவர் விஜய் பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இனிப்புகள் வழங்கினர்.