மதுரை விரகனூர் மஹாராஜா நகரில் உள்ள விஜயராஜன்
பள்ளி 26 வது ஆண்டு விழா.
மதுரை விரகனூர் மஹாராஜா நகரில் உள்ள விஜயராஜன் நர்சரி & பிரைமரி பள்ளியின் 26 வது ஆண்டு விழா பள்ளி தலைமை ஆசிரியர்
S.பாமா தலைமையில் நிர்வாக இயக்குனர் N.Dr.வசந்தலட்சுமி. முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் மாணவச் செல்வங்களுக்கு பள்ளி வளாகத்தில் பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் இடம் பெற்றது. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற சிறந்த குழந்தைகளுக்கு பள்ளி நிர்வாக இயக்குனரால் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியைகள் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகம் சார்பில் சிறப்பாக செய்திருந்தனர்.