திருப்பத்தூர்:டிச:16, திருப்பத்தூர் மாவட்ட விஜய பாரத மக்கள் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சக்தி தலைமையில் 20 க்கும் மேற்பட்டோர் அனுமன் ஜெயந்தி விழாவினை நடத்திட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அம்மனுவில் குறிப்பிட்டிருந்ததாவது:எதிர்வரும் 30.12.2024 தொடங்கி மூன்று நாட்கள் பதினோராம் ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா மற்றும் திருவீதி உலா விழா நடத்தவும், புதிய பேருந்து நிலையம், கோட்டை ஸ்ரீதிரிபுர சுந்தரிச மேத பிரம்மேஸ்வரர் ஆலயம் ஆகிய இரு இடங்களில் பஞ்சலோக அனுமன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வீதி விழாவான சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஒலிப்பெருக்கி வைத்துக்கொள்ள அனுமதி வேண்டி குறிப்பிடப்பட்டிருந்தது. திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையம் தொடங்கி தூய நெஞ்சக் கல்லூரி, பொன்னியம்மன் கோயில் தெரு, தண்டபாணி கோயில் தெரு, வேனுகார தெரு வழியாக வழக்கமாக பஞ்சலோக அனுமன் சிலை நிறுத்திவைக்கப்பட்டு கோட்டை ஸ்ரீதிரிபுர சுந்தரி பரமேஸ்வரர் ஆலயத்தில் அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு பின்னர் அங்கிருந்து புறப்படும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அனுமன் ஜெயந்தி விழா மற்றும் வீதி உலாவிற்கு அனுமதி வழங்கி காவல்துறை பாதுகாப்பு வழங்கிட விஜய பாரத மக்கள் கட்சியினை சேர்ந்த மாநிலத் துணைத் தலைவர் வி.சக்தி ஜி, மாவட்ட பொறுப்பாளர்கள் பழனி வடிவேலன், திருப்பத்தூர் மாவட்ட தலைவர் கே. சசிகுமார், மாவட்ட பொதுச் செயலாளர் முத்துக்குமரன் மற்றும் கோவிந்தராஜ், சின்ன வரிகம் குமார் மற்றும் இருபதுக்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் உடன் இருந்தனர்.