தேனி ,எப்.-20
தமிழக முழுவதும் வெற்றி தமிழர் பேரவை அமைப்பு உருவாக்கப்படும் அறிமுக கூட்டத்தில் கவிஞர் வைரமுத்து அறிவிப்பு.
இலக்கியம், கலாச்சாரத்தை பாதுகாக்கவே வெற்றித் தமிழர் பேரவை செயல்படும் கவிஞர் வைரமுத்து பேச்சு.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கவிப்பேரரசு கவிஞர் வைரமுத்துவின் வெற்றித் தமிழர் பேரவையின் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற வெற்றி தமிழர் பேரவையின் நிறுவனர் கவிஞர் வைரமுத்து புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்ததோடு அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.
கவிப்பேரரசு வைரமுத்து அக்கூட்டத்தில் பேசியபோது ….
பொறாமை, சோம்பேறித்தனம், மது, நேர்மையின்மை, ஊழல் ஆகியவை வெற்றிக்கு பகை என்றும்,
தமிழகத்தில் கலாச்சார அமைப்பு இல்லை வெற்றித் தமிழர் பேரவை தான் கலாச்சார அமைப்பை பாதுகாக்கும்,
வெற்றித் தமிழர் பேரவை ஜாதி, மதம், மொழி, அரசியல் கடந்து அனைவருக்குமான இலக்கிய அமைப்பாக கலாச்சார அமைப்பாக வெற்றித் தமிழர் பேரவை செயல்படும்.
கமலஹாசன் அரசியலுக்கு வரவேண்டும் எனக் கூறிய போது எனக்கு சினிமாவில் ஓரளவுக்கு நடிக்க தெரியும், ஆனால் அரசியலில் நடிக்க தெரியாது என்று அரசியலுக்கு வருவதற்கு முன்பு தெரிவித்ததை தற்பொழுது நினைவு கூர்ந்து பேசினார்.
பொது வாழ்க்கைக்கு வர வேண்டும் என்றால் தன்னலம் தவிர்த்து பொதுநலம் பேண வேண்டும், இந்த அமைப்பு தமிழுக்கு தொண்டு செய்வது, கல்வி மற்றும் மருத்துவம் தொடர்பாக சேவை செய்ய வேண்டும் என்றும், தமிழக முழுவதும் வெற்றி தமிழர் பேரவை உருவாக்கப்படும் என்பதோடு, பொது ஒழுக்கம் மற்றும் அன்பை கட்டமைப்போம் என்று கூறியதோடு போதை பழக்கத்திற்கு அடிமையான நபர்களை போதைப் பழக்கத்திலிருந்து விடிவிப்பதே தனக்கு நோபல் பரிசு கிடைத்ததற்கு சமம் எனவும் தமிழர்களுக்கு செய்கிற தொண்டு எனவும் பேசினார்.