தஞ்சாவூர் மார்ச் 26.
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத் தில் மெய்யியல் துறை சார்பில் வேதாத்திரி மகரிஷி அறக்கட்டளை கருத்தரங்கம் நடைபெற்றது.
இக்கருத்தரங்குக்கு பதிவாளர் (பொ)பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். ஆழியாறு உலக சமாதான சேவா சங்க பொதுச் செயலாளர் சேகர் சிறப்புரையாற் றினார் .மொழி புலத் தலைவர் கவிதா, மனவளக்கலை நிர்வாக அறங்காவலர் பூரணச்சந்திரன் வாழ்த்துரையாற்றினார்.
முன்னதாக மெய்யியல் துறை தலைவர் முனைவர் நல்லசிவம் வரவேற்றார். நிறைவாக மெய்யியல் துறை உதவி பேராசிரி யர் சுரேஷ் நன்றி கூறினார். நிகழ்ச்சியை முனைவர் பார்த்திபன் தொகுத்து வழங்கினார்.



