சிவகங்கை:டிச:30
சிவகங்கை தெற்கு ஒன்றிய திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்விழா, மற்றும் கூட்டுறவு துறை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் அவர்களது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு மானாகுடி கிளைக்கழக திமுக சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், திருச்சி புதுக்கோட்டை, மாவட்டத்தை சேர்ந்த 15 காளைகள் மற்றும் 135 வீரர்கள் கலந்து கொண்டனர் .வெற்றி பெற்ற காளைகள் மற்றும் வீரர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
மானாகுடி திமுக கிளைக்கழக செயலாளர் அய்யப்பன் இளைஞரணி வெல்டிங் செந்தில்குமார் ஆகியோரது ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த வடமாடு மஞ்சு விரட்டு நிகழ்ச்சியில் சிவகங்கை தெற்கு ஒன்றியக்கழக செயலாளர் டாக்டர் ம. ஜெயராமன் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.
இந்த நிகழ்ச்சியில் விழாக்கமிட்டியாளர்கள், இளைஞர்கள் கிராமப்பொதுமக்கள்
திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.