அஞ்சுகிராமம் மார்ச் – 13
குமரி மாவட்ட விசிக மாணவர் முற்போக்கு கழக மாவட்ட துணை தலைவர் சமூக ஆர்வலர் இந்திரா நகர் முத்துக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :-
தமிழகத்தில் கல்வி நிலையங்களில் தலித் மாணவர்கள் தாக்கப்படுவது திராவிட மாடல் ஆட்சியில் தொடர்கதையாகிவிட்டது. தலித் மக்கள் கல்வியில் சிறந்து விளங்குவதாலும், வறுமையிலும் பள்ளி படிப்பை தொடர்ந்து, அரசு பணிகளில் அமர்ந்து, பொருளாதாரத்தில் முன்னேறுவதை சகித்து கொள்ள முடியாத சாதி வெறியர்கள் வன்முறையில் ஈடுபடுவதை விசிக குமரி மாவட்ட முற்போக்கு மாணவர் கழகம் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவை குண்டம் அருகிலுள்ள அரியநாயகி புரத்தைச் சார்ந்த 17 வயது மாணவர் தேவேந்திரராஜ் கொடூரமான முறை யில் வெட்டப்பட்டு வன்கொடுமைக்கு ஆளாகி இருப்பது பெரும் அதிர்ச்சி யை அளிக்கிறது.. தென் மாவட்டங்களில் சாதிய வன்கொடுமைகள் அண்மைக்கால மாக அதிகரித்து வருகின்றன. குறிப் பாக கல்வி நிலையங்களுக்குள் சாதிய சக்திகளின் ஊடுருவல்களும், பள்ளி மாணவர்கள் மத்தியில் சாதிய வன் கொடுமை தாக்குதல்களும் நிகழ்வது அபாயகரமானதாகும். தாக்குதலுக்கு ஆளான தேவேந்தி ரராஜ் பதினோராம் வகுப்பு படித்து வருபவர். பள்ளிக்கு பேருந்தில் செல் லும் வழியில் தாக்கப்பட்டு இருக்கிறார். இரண்டு கைகளிலும் விரல்கள் வெட் டுப்பட்டுள்ளன. தலையிலும், முதுகி லும் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளது.தற்போது திருநெல்வேலி அரசு மருத்துவ மனையில் அறுவை சிகிச்சை செய்யப் பட்டு ஆபத்தான நிலையில் உள்ளார்
கட்டாரிமங்கலம் என்ற ஊரில் நடை பெற்ற கபடி போட்டியில், கெட்டியம் மாள்புரம் அணியை தோற்கடித்து அரிய நாயகிபுரம் அணி வெற்றி பெற்றதே இந்த கொலைவெறித் தாக்குதலின் பின் புலம் என்று தகவல்கள் தெரிவிக்கின் றன. வெற்றி பெற்ற அரியநாயகிபுரத் தின் கபடி வீரர்கள் அனைவரும் தலித் சமூகத்தைச் சார்ந்தவர்கள், பள்ளி, கல்லூரி இளைஞர்கள் என்பதை யும், இயல்பாகவே அரியநாயகிபுரம் அணியினர் வெற்றியை கொண்டாடி யதையும் தோற்றுப் போன அணியின ரால் பொறுத்துக் கொள்ள முடிய வில்லை. பள்ளி மாணவர்கள் மத்தியில் சாதிய சிந்தனைகள் எந்த அளவிற்கு புரையோடிப் போயிருக்கிறது என்பதை இந்த கொடூரமான வன்முறை வெளிப் படுத்துகிறது. இத்தகைய கொடூரங்கள் தொடர் நிகழ்வுகளாக மாறி வருவதை அக்கறை யோடும் கவலையோடும் சமூகம் அணுக வேண்டியிருக்கிறது. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பள்ளி மாணவர் சின்னத்துரை தாக்கப்பட் டதையொட்டி நீதிபதி சந்துரு தலைமை யில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப் பட்டு பரிந்துரைகளும் பெறப்பட்டஅறிக்கையின் அடிப்படையில் தேவேந்திரராஜ் மீது தாக்குதலில் ஈடுபட்டவர்களின் மீது தீவிர கடுமையான தண்டனை வழங்க வேண்டும். இத்தகைய சாதிய வெறியூட்ட லுக்கு பின்புலமாக இருக்கிற சாதி ஆதிக்க சக்திகள் கண்டறியப்படுவதும், தனிமைப்படுத்தப்படுவதும், உரிய நட வடிக்கைகளுக்கு உட்படுத்தப்படு வதும் அவசரமான தேவை என்பதை குமரி மாவட்ட விசிக. முற்போக்கு மாணவர் அணி வலியுறுத்துகிறது. தமிழ்நாடு அரசு அதற்கு ரிய வகையில் காவல்துறை, உளவுத் துறை செயல்பாடுகளையும் பரிசீலித்து சாதிய பாகுபாடு இல்லாமல் செயல்படு வதையும், இத்தகைய கொடுமைகள் நடைபெறாமல் தடுப்பதையும் உறுதி செய்ய வேண்டுமென குமரி மாவட்ட விசிக முற்போக்கு மாணவர் கழக மாவட்ட துணை செயலாளர் இந்திரா நார் முத்துக்குமார் கூறியுள்ளார்.