தோவாளை ஊராட்சி ஒன்றியம், பீமநகரி ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் மூன்று (KVVT), NHS & HFA) கணக்கெடுப்புகளிலும் விடுபட்ட பயனாளிகளில் தேர்வு செய்யப்பட்ட 20 பயனாளிகளுக்கு ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் வீடு கட்ட அனுமதி ஆணையை . பீமநகரி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து நேற்று கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மற்றும் பீமநகரி ஊராட்சி தலைவர் சஜிதா சுப்பிரமணியன் வழங்கினர். உடன் காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் கே டி உதயம், நாகர்கோயில் மாநகர தலைவர் நவீன் குமார் உள்ளனர்.



