மதுரை நவம்பர் 7,
மதுரை மாநகராட்சி மண்டலம் 2, வார்டு 31 க்கு உட்பட்ட கரும்பாலை பகுதியில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில்
ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைக்கட்டிடத்தை மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் குத்துவிளக்கேற்றி பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மண்டலத் தலைவர் அ.சரவணபுவனேஸ்வரி, உதவி ஆணையாளர் கோபு, 31 வார்டு (காங்கிரஸ்) மாமன்ற உறுப்பினர் முருகன், கல்விக்குழுத் தலைவர்
மா.பெ.ரா.ரவிச்சந்திரன், காங்கிரஸ் தலைவர் பிரபு, திமுக வட்ட செயலாளர் முத்துமோகன், திமுக இளைஞர் அணி மாய கண்ணன், விசிக தாமரை வளவன், ஆறுமுகம் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் வாணி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.