ராமநாதபுரம், ஏப்.7-
ராமநாதபுரத்தில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் இந்தியாவில் முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் அரச வன்முறையை கண்டித்து ராமேஸ்வரம் வருகை தந்த இந்திய பிரதமர் மோடியை கண்டித்து ராமநாதபுரம் ரயில் நிலையம் முன்பாக ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஹைதர் அலி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநில பொதுச் செயலாளர் திருப்பூர் ஹாலிதீன், மாநில பொருளாளர் செய்யாறு அப்பாஸ், மாநில துணைத்தலைவர் முசாபஹுதீன், மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் பாபு, மாநில செயலாளர் அகமது ஹாஜா, கயத்தாறு பீரப்பா, திண்டுக்கல் ஜமால் முகமது, ராமநாதபுரம் அன்வர் அலி, மதுரை சிக்கந்தர் அப்துல் ஹாலித், காஞ்சி ஹைதர் அலி, புழல் பசீர், பொறியாளர் பக்ருதீன், தலைமை நிலைய செயலாளர் நியாமத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் புதிய வகுப்பு திருத்த சட்டம் இஸ்லாமிய சமூகத்தின் சொத்துக்களை அபகரிக்கும் தீய நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டது, ரமலான் பண்டிகை அன்று விடுமுறை அளிக்காமல் அனைத்து வங்கிகளும் கட்டாயம் இயங்க வேண்டும் என ஆர்பிஐ உத்தரவிட்டுள்ளது, ரமலான் மாதத்தில் பாரதிய ஜனதா ஆளும் உத்தர பிரதேசம் ஹரியானா இமாச்சல உத்தரகன் ஆகிய மாநிலங்களில் முஸ்லிம்கள் மீதும் முஸ்லிம்கள் வழிபாட்டுத்தலங்கள் மீதும் தொடர் தாக்குதல் நடத்தப்பட்டது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை கண்டித்து பிரதமர் மோடிக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். முன்னதாக ஆர்ப்பாட்டத்தை மாநில செயலாளர் ராமநாதபுரம் அன்வர் அலி வரவேற்று தொடங்கி வைத்தார். ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் சுல்தான் நன்றி கூறினார். நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.