அரியலூர், மே 22:
அரியலூர் மாவட்டம், செந்துறையிலுள்ள நடைப்பாதை வியாபாரிகள் செந்துறை அண்ணாநகர் பகுதியில் ரோட்டோரம் உள்ள பூக்கடை ஒன்றுக்கும், தீமிதி திடல் பகுதியில் ரோட்டோரம் உள்ள இரண்டு இட்லி கடை விற்பனை செய்யும் தொழிலாளிக்கும், பேருந்து நிலையத்தில் உள்ள செருப்பு தைக்கும் தொழிலாளிக்கும் உலக திருக்குறள் கூட்டமைப்பு மற்றும் இனிப்பு அறக்கட்டளை சார்பில் இலவசமாக நிழல்குடைகள் புதன்கிழமை நேற்று வழங்கப்பட்டன.
இதற்காக நடைபெற்ற நிகழ்ச்சிக்கு உலகத் திருக்குறள் கூட்டமைப்புத் தலைவர் மு. ஞானமூர்த்தி தலைமை வகித்து, வியாபாரிகளுக்கு நிழல்குடைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் இனிப்பு அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் இளங்கோவன் பொருளாளர் நல்லாசிரியர் செüந்தர்ராஜன், தலைமை துறை இயக்குநர் முனைவர் சின்னதுரை, குறள் ஆர்வலர்கள் ஆர். விசுவநாதன், தேன்துளி, திருமூர்த்தி, புகழேந்தி, சுப்பிரமணியன், அகிலன், ஆகியோர் கலந்துகொண்டனர்.