கன்னியாகுமரி, நவ: 28
அஞ்சுகிராமம் பேரூர் திமுக சார்பில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா அஞ்சுகிராமம் பேரூராட்சிக்குட்பட்ட வாரியூர் அரசு தொடக்கப்பள்ளியில் கேக் வெட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு அஞ்சுகிராமம் பேரூர் செயலாளர் இளங்கோ இளங்கோ தலைமை தாங்கினார். அஞ்சுகிராமம் பேரூர் திமுக துணைச்செயலாளர்கள் ஆர்.வீ. சுந்தரராஜ், சமூக சேவகர் ஆட்டோ சொர்ணப்பன், அமைப்புசாரா அணி மாவட்ட துணை அமைப்பாளர் சுயம்பு, பேரூராட்சி துணைத் தலைவர் காந்தி,
கிளைச் செயலாளர் அஞ்சை சுயம்புலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக அஞ்சுகிராமம் பேரூராட்சி மன்ற தலைவர் ஜானகி இளங்கோ வளர்ந்து கொண்டு கேக் வெட்டி மாணவ மாணவிகளுக்கு வழங்கினார். தொடர்ந்து மாணவிகளுக்கு பென்சில், ரப்பர் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் வேலாயுத பெருமாள், சுயம்பு, ஜெயக்கொடி, பாலன், குரு மார்த்தாண்டன், துரைபாண்டியன், ரவி, ஆனந்த் உட்பட பல கலந்து கொண்டனர்.