நாகர்கோவில் அக் 21
குமரி மாவட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பீமநகரில் பசுமை வளத்தை மேம்படுத்த சாலை பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.
தமிழக ஊராட்சி பகுதிகளில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பயன்தரும் மரக்கன்றுகள் நடும்பணி தமிழக முழுவதும் நடைபெற்று வருகிறது, அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்ட ஊரக பகுதிகளில் சுமார் 9030 மரக்கன்றுகள் நடும்பணி கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று தோவாளை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பீமநகரில் ஊராட்சி சாலை பகுதிகளில் சுமார் 520 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. ஊராட்சி மன்ற தலைவி சபிதா சுப்ரமணியன் தலைமையில் ஊரக வளர்ச்சி அலுவலர் சேகர் மரம்கன்று நடும் பணியை தொடங்கி வைத்தார். பசுமை வளத்தை மேம்படுத்தவும்,மழை பொழிய வேண்டியும் சாலை ஓரங்களில் மகானி, ஈட்டி,பூவரசு, வாகை உள்ளிட்ட நிழல் தரும் மரக்கன்றுகள் நடும்பணி நடைபெற்று வருவதாக பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரி சேகர் தெரிவித்தார்.