கன்னியாகுமரி நவ, 2.
கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த நாளையொட்டி நேற்று களியக்காவிளை அருகே குழிவிளை படிப்பகம் முனபே வாறுதட்டு அன்னை தெரசா அறக்கட்டளை மற்றும் நித்திரவிளை ஜோஸ் தீரஜ் அறக்கட்டளையின் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் இயற்கை இன்று முற்றிலும் அழிக்கப்பட்டு வருகிறது.ஆகவே கன்னியாகுமரி மாவட்டத்தின் பிறந்தநாளை வாறுதட்டு அன்னை தெரசா அறக்கட்டளையும், நித்திரவிளை ஜோஸ் தீரஜ் கலை பண்பாட்டு சேவா அறக்கட்டளையும் இணைந்து குழிவிளை படிப்பகம் முன் மரக்கன்றுகள் நட்டுக் கொண்டாடினர். விழாவிற்கு வாறுதட்டு அன்னை தெரசா அறக்கட்டளையின் தலைவர் என்.எம்.பிரேம்ராஜ் தலைமை தாங்கினார்.நித்திரவிளை ஜோஸ் தீரஜ் கலை பண்பாட்டு சேவா அறக்கட்டளையின் தலைவர் கலை இளமணி ஜோ.ஸ்.தீரஜ் முன்னிலை வகித்தார்.சிறப்பு விருந்தினராக பிரபல மாஜிக் நிபுணர் ராஜ் பங்கேற்று விழாவை சிறப்பித்தார்.அன்னை தெரசா அறக்கட்டளை பொருளாளர் ஏ. சூரஜ், ஜோஸ் தீரஜ் கலை பண்பாட்டு சேவா அறக்கட்டளையின் மக்கள் தொடர்பு அலுவலர் ஜோணி அமிர்த ஜோஸ்,அன்னை தெரசா அறக்கட்டளையின் உறுப்பினர்கள் ஷெறின்,கோபின் பெனிக்ஸ், ஷாரூக் உட்பட பலர் விழாவில் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனர்.