தஞ்சாவூர் ஆகஸ்ட் 4.
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக த்தில் தமிழக அரசு நேரடி நியமன அரசு தணிக்கை துறை தணிக்கை யாளர்களுக்கான அடிப்படை பயிற்சி தொடக்க விழா நடை பெற்றது.
இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் கலந்து கொண்டு பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து, தணிக்கை யாளர்களுடன் கலந்துரையாடினார்
இந்த வகுப்பில் 152 தணிக்கை யாளர்கள் கலந்து கொண்டனர் இவர்கள் இங்கு 90 நாட்கள் தங்கி பயிற்சி பெறுகிறார்கள்.
தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தர் திருவள்ளுவன், இந்து சமய அறநிலையத் துறை இயக்கு னர் சீனிவாசராகவன், தமிழ் பல்கலைக்கழக பதிவாளர் (பொ) தியாகராஜன், கூட்டுறவு தணிக்கை துணை இயக்குனர் ஸ்ரீதர், நிதி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, துணை பதிவாளர் பன்னீர்செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.