நாகர்கோவில் டிச 24
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர் கழக அமைப்புச் செயலாளர், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் ந.தளவாய்சுந்தரம் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 37 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நேற்று வெளியிட்டுள்ள உருக்கமான செய்தி :- அண்ணாவின் இதயக்கனி” மக்கள் இதயங்களில் வாழும் கொடைவள்ளல் புரட்சித்தலைவர் புகழ் வரலாற்றில் என்றும் நிலைக்கும் தங்க முகம் கொண்டு, சந்தன உடல் கொண்டு தமிழினம் தழைக்க வந்த தன்னிகரில்லா தலைவரே தமிழ் மொழியின் பாதுகாவலரே முத்தமிழ் வளர்த்த தமிழ் சுவையே அண்ணாவின் இதயக்கனியே மக்கள் இதயங்களில் வாழும் கொடைவள்ளலே இருந்த காலம் வரை மக்கள் துயர் அகற்றி வருங்கால தலைமுறைக்கும் வாழ்வு உயர வளமான திட்டங்களை தந்த எங்கள் உயிரே நீவீர் வாழ்ந்த காலமே தமிழகத்திற்கு பொற்காலம் அக்காலம் கிடைக்குமோ தமிழினத்திற்கு தாங்கள் மறைந்தாலும் மக்கள் மனதில் நீக்க மற நிறைந்திருக்கும் தமிழினத்தின் அருட் கொடையே, தமிழகத்தின் ஒளி விளக்கே உம் புகழ் உலகம் இருக்கும் வரை என்றென்றும் நிறைந்திருக்கும், நிலைத்திருக்கும். வாழ்க புரட்சித்தலைவர் புகழ்.என்றும் உங்கள் வழியில் மக்கள் பணி என உருக்கமாக தெரிவித்துள்ளார்.