நாகர்கோவில் அக் 4
கன்னியாகுமரியில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி நேற்று தோவாளை வட்டாரம் செண்பகராமன் புதூர் பகுதியில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர்.செந்தில்குமார் தலைமையில் அகஸ்தீஸ்வரம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் க.சக்திமுருகன் மற்றும் குளச்சல் உணவு பாதுகாப்பு அலுவலர் ரவி ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.ஆய்வின்போது தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட புகையிலை விற்பனை செய்த இரண்டு கடைகள் கண்டுபிடிக்கப்பட்டு மூடப்பட்டது .மேலும் உணவகங்களில் அனுமதி மறுக்கப்பட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் 3 கிலோ பறிமுதல் செய்து அழிக்கப் பட்டதுடன் இரண்டு உணவகங்களுக்கும் மொத்தம் ரூ 4000 அபராதம் விதிக்கப்பட்டது.