நாகர்கோவில் – ஜன- 16
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ராமன்புதூர் சந்திப்பில் வைத்து திருவள்ளுவர் அறக்கட்டளை சார்பில் 6 – ஆம் ஆண்டு பொங்கல் விழா மற்றும் சமூக சாதனையாளர் விருது வழங்கும் விழா தலைவர் ஜாண் தலைமையில் , பொருளாளர் ஷாஜி ,செயற்குழு உறுப்பினர்கள் ஜெயராஜ் , மெர்லின் பிரபா , காருண்ய ஷோபா, செல்வின் சுபாஷ், அமைப்பாளர் சுந்தர்ராஜ், பசுமை நாயகன் டாக்டர் . நாகேந்திரன், இணை அமைப்பாளர் சரலூர் ஜெகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.கோட்டார் காவல் உதவி ஆய்வாளர் சத்திய சோதனை தேசிய மாணவர் படை அதிகாரி அருள் ராஜன், தாய் அறக்கட்டளை ஜெயன்றீன்,அறிஞர் அண்ணா கல்லூரி பேராசிரியர் (ஓய்வு) முனைவர் கலையரசு சமூக சேவகர் முத்துக்குமார், சமூக ஆர்வலர் ஜூலியஸ் , உள்ளிட்ட ஒரு சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.வரவேற்புரை மற்றும் நிகழ்ச்சியை செயலாளர் ஆனந்த் தொகுத்து வழங்கினார் இந்நிகழ்ச்சியில் சிற்பக்கலை, திருக்குறள் ஒப்புவிப்பு, தமிழ் ஆர்வலர்கள் , சமூக சேவகர்கள் உள்ளிட்டோருக்கு சிறப்பு விருதுகள் மற்றும் ஏழை மாணவர்களுக்கு உடைகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் பாரம்பரிய தமிழரின் நாட்டுப்புற விளையாட்டு மற்றும் சிறுவர் சிறுமிகளுக்கான சிலம்பாட்ட நிகழ்ச்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அணைவரையும் மகிழ்விக்கும் விதமாக மாபெரும் மேஜிக் ஷோ நடைபெற்றது.