நவ.30
திருப்பூர் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் மாவட்ட நியமன அலுவலர் உணவு பாதுகாப்புத்துறை மருத்துவர் விஜயலலிதம்பிகை தலைமையில் ஸ்டாலின் பிரபு, சிரஞ்சீவி, ரகுநாதன், பாலமுருகன், இளங்கோவன், ஆகியோர் அடங்கிய உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழு தாராபுரம் நகராட்சி பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வில் உணவகங்கள் மற்றும் துரித உணவகங்கள் சாலையோர உணவு கடைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் உணவகங்களின் உட்புற சுத்தம் பணியாளர்களின் சுய சுத்தம் தயாரிக்கப்படும் இடம் அவற்றின் சுகாதாரம் மற்றும் உணவுப் பொருட்களின் காலாவதி தேதி தயாரிப்பு தேதி தயாரிப்பாளர் முழு முகவரி ஆகியவை உள்ளதா என கண்டறியப்பட்டது.
மேலும் தயாரிப்பு தேதி அல்லாத காலாவதி தேதி அல்லாத உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் கொள்முதல் பதிவேடு மற்றும் ஸ்டாப் ரெஜிஸ்டர் ஆகியவற்றை பராமரிக்க உத்தரவு விடப்பட்டது.
பணியாளர்கள் சுய சுத்தம் பேணவும் மருத்துவ சான்றிதழ்களை ஆறு மாதத்திற்கு ஒருமுறை பெறவும் அறிவுறுத்தப்பட்டது
முரணாக மற்றும் முறையற்ற வகையில் பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகள் காலாவதியான மேலும் உணவு பாதுகாப்பு பயிற்சி பெற்ற ஒருவர் கொண்டு உணவகத்தை மேற்பார்வை செய்ய அறிவுறுத்தப்பட்டது.
மேலும் ஒருமுறை பயன்படுத்திய எண்ணையை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்கவும் அதை அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு மறுசுழற்சி அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டது செயற்கை வண்ணங்களை சிக்கன் மற்றும் மட்டன் வகைகளில் உபயோகப்படுத்த வேண்டாம் அறிவுறுத்தப்பட்டது மேலும் சிக்கன் மட்டன் வகைகளை அவ்வப்போது தேவைப்படும் அளவிற்கு உடனடியாக வாங்கிக் கொள்ளவும் அவற்றை இருப்பு வைத்துக் கொள்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டது.
அசைவ உணவுகளை சாதன பெட்டியில் வைக்கும் போது குளிர்சாதன பெட்டியின் உரைநிலை குறித்து பதிவேடுகள் பராமரிக்க அறிவுறுத்தப்பட்டது நேற்று தயாரித்த உணவை இன்று விற்பனைக்காக வைத்திருந்த இரண்டு கடைகளில் பழைய உணவகங்கள் சுமார் 3 கிலோ அளவில் பறிமுதல் செய்யப்பட்டு உடனடியாக அளிக்கப்பட்டது. பிரட் ரைஸ் மற்றும் நூடுல்ஸ் வகைகளை அன்றாடும் நன்றாக தயாரித்து அன்றே உபயோகிக்க படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டது மேலும் காலாவதியான பிரட் ரைஸ் நூடுல்ஸ் வகைகள் சுமார் 5 கிலோ அளவில் பறிமுதல் செய்யப்பட்டு அளிக்கப்பட்டது. ஆய்வின் போது உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்திற்கு விதிகளுக்கு முரணாக செயல்படும் கடைகள் மீது அபராதம் விதிக்கப்படும்.
இறைச்சி வகைகள், காலாவதியான பிரட் மற்றும் பன் வகைகள் சுமார் 27 கிலோ அளவில் பறிமுதல் செய்யப்பட்டு அளிக்கப்பட்டது.
சுகாதாரமின்மைக்காகவும்
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பயன்பாட்டுக்காகவும் சுமார் 8 உணவகங்களுக்கு தலா ஆயிரம் முதல் 2000 வரை அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் சாலையோர சில்லி சிக்கன் கடைகள் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் இது போன்ற திடீர் ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு உணவு பாதுகாப்புச் சட்டம் அதன் செயவிதிகளுக்கு உணவு கடைகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.உணவு பாதுகாப்பு தொடர்பான 9444042322 என்ற எண்ணிற்கு அல்லது உணவு பாதுகாப்பு குறை தீர்ப்பு செயலி மூலமாக புகார் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.