அஞ்சுகிராமம் ஜன- 17
அஞ்சு கிராமம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட மயிலாடி வடக்கூரை சார்ந்த ஸ்தபதி நடேசன். அவரது மனைவி தங்கம் நடேசன் (வயது 48) அகஸ்தீஸ்வரம் வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவியாக உள்ளார். மேலும் பல சமூக, சமுதாய, தொண்டு நிறுவனங்களின் பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார். மயிலாடி பேரூராட்சி மன்றத்தில் முன்னாள் கவுன்சிலராக பணியாற்றியுள்ளார் சிறந்த சமூக சேவகியான தங்கம் நடேசன் மயிலாடி வடக்கூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் கலந்து கொண்டு ஆண்களுக்கு இணையாக சுமார் 63 கிலோ எடை உள்ள கல்லை அசால்டாக தூக்கி வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற தங்கம் நடேசன்-க்கு பொதுமக்கள் கரகோஷம் எழுப்பி பாராட்டு தெரிவித்தனர்.