மதுரை மே 21 திருப்பரங்குன்றம் அருகே உள்ள வளையன்குளம் கிராமத்தில் முத்தாலம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அம்மா பிள்ளை (வயது 65) இவரது மகன் வயிற்று பேரன். வீரமணி (வயது 10) மற்றும் அருகில் உள்ள வீட்டில் இருந்த பெண் வெங்கட்டி (வயது 55) என்பவர் இரவு ஏழு மணி அளவில் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென மின்தடை ஏற்பட்டதால் அம்மா பிள்ளை -வீட்டின் வாசலில் அருகே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
அந்நேரத்தில்
கனமழை பெய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில் வெங்கட்டி மற்றும் அம்மா பிள்ளை அவரது பேரன் வீரமணி ஆகியோர் படுகாயமடைந்தனர்.
அதனை தொடர்ந்து அருகில் உள்ளவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அனைவரையும் வலையன்குளம்.அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து முதலுதவி சிகிச்சை பெற்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கட்டி மரணம் அடைந்தார்.
அதனைத் தொடர்ந்து சிறுவன் வீரமணி மற்றும் அம்மா பிள்ளை ஆகிய இருவரையும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் பலியான வெங்கட்டி உடலை உடற்கூறு ஆய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்,
மேலும் படுகாயம் அடைந்த அம்மா பிள்ளை, சிறுவன் வீரமணி ஆகியோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் சிறுவன் வீரமணியும் அவரது பாட்டி அம்மா பிள்ளையும் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டனர்.
வலையங்குளம் பகுதியில் மழையினால் சுவர் இடிந்து விழுந்த்த விபத்தி இரு பெண்கள் மற்றும் சிறுவன் உள்பட மூவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த
விபத்து குறித்து பெருங்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.