கடையநல்லூர் நவ 20
கடையநல்லூர் ஆக்கிரமிப்பு விவகாரத்தில் அதிகாரிகள் பண்ணுகின்ற கூத்தால் வசதி படைத்தவர்களுக்கு ஒரு நடவடிக்கை இல்லாதவர்களுக்கு ஒரு நடவடிக்கை யா?
கடையநல்லூர் தேசிய நெடுஞ்சாலையில் நடத்தப்பட்டு வரும் ஆக்கிரமிப்பு அகற்றும் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடந்து கொள்ளும் விதம் பெரும் கவலை அளிக்கிறது . உள்ளபடியே அரசு இயந்திரங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அதிகாரிகள் யாவரும் மக்களுக்கு சேவை செய்யத்தான் வந்திருக்கிறார்களா? சட்டப்படி பணியாற்றத்தான் கடமை பட்டுள்ளார்களா ? என்பதே பெரும் கேள்விக்குறியாக உள்ளது 100 கோரிக்கை மனுக்கள் புகார்கள் கொடுத்த பின்பு ஒருநாள் எடுக்கின்ற இந்த நடவடிக்கையில் கூட இவ்வளவு எகத்தாளமா?
அரசுக்கு வரி செலுத்தும் மக்களை என்னதான் நினைத்திருக்கிறார்கள் இந்த அதிகாரிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கொடுக்கும் அழுத்தத்திற்கு மண்டி யிடும் அதிகாரிகள் அந்த அந்த மக்கள் பிரதிநிதி தேர்ந்தெடுக்கும் வாக்குரிமையை செலுத்துகின்ற மக்களுக்கு ஏன் முன்னுரிமை கொடுக்க முன் வருவதில்லை என்பதுதான் ஒட்டுமொத்த பொதுமக்களின் கேள்வி எதற்காக இந்த ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அரசு பணத்தை வீணாய் செலவழிக்க வேண்டும் எப்பொழுதும் போல் போக்குவரத்தின நெருக்கடிகளில் விபத்துகளால் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் உயிரை மாய்த்துக் கொள்ளட்டுமே இருந்து விட்டு போக வேண்டியது தானே என பொதுமக்கள் பெருத்த கவலையுடன் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளைப் பார்த்து கேள்வி எழுப்பியுள்ளனர் முறையே விதிகளுக்கு முரணாக பாரபட்சம் காட்டி தங்கள் நடவடிக்கை அமையுமே ஆனால் இது குறித்து நீதிமன்ற மூலம் நாளை மறுநாள் வழக்கு தொடர பொதுமக்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் தயாராக உள்ளன என்பதை தங்களுக்கு தெரிவிக்கும் தகவல் என கடையநல்லூர் பொதுமக்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் தெரிவித்துள்ளனர்..