நாகர்கோவில் நவ 14
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையின் கால் நூற்றாண்டு விழாவான வெள்ளி விழாவை தமிழ்நாடு அரசு சார்பில் டிசம்பர் 31, ஜனவரி 01 ஆகிய இரண்டு நாட்கள் நடத்தப்போவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனத்தலைவர் முத்துக்குமார் கூறியதாவது:-
“கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு வெள்ளிவிழா நடத்தப்படுவது வரலாற்று நிகழ்வாகும். உலகமெங்கும் உள்ள தமிழர்களின் உள்ளங்களில் வாழும் தெய்வ புலவரான திருவள்ளுவருக்கு வெள்ளி விழா நடத்தப்படுகிறது.
இதையொட்டி கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை நடந்து சென்று பார்ப்பதற்கான கண்ணாடி கூண்டு பாலம் பணிகள் துரிதமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.
மேலும் அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழறிஞர்களை ஒருங்கிணைத்து விழாவில் பங்கேற்பதற்கான முன்னேற்பாடு பணிகளும் நடந்தேறி வருகிறது.
இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த தமிழறிஞர்கள், இலக்கியம் சார்ந்த அமைப்புகளோடு விவாதிக்க பட்டது. இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து, ” முன்னேற்பாடு பணிகள் துரிதமாக நடத்தி வருவதற்காக நன்றியும் தெரிவிக்கப் பட்டது.
இந் நிகழ்வில் குறளகம் தமிழ்குழவி, டாக்டர் நாயகம், டாக்டர் ராஜேஷ் கோபால், முனைவர் கீதா உட்பட தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் அமைப்புகளை சேர்ந்த பலரும் கலந்துக் கொண்டனர். அகில இந்திய தமிழர் கழகத்தின் சார்பில் நிறுவனத்தலைவர் முத்துக்குமார் கலந்துக் கொண்டு நன்றி தெரிவித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.