திருப்பூர், டிசம்பர் 04 –
திருப்பூர் மாநகராட்சி வடக்கு சட்டமன்றத் தொகுதி 8வது வார்டு கங்கா நகர் பகுதியில் நவீன மனிதர்கள் இயக்கத்தின் நிறுவனர் திரு. பாரதி சுப்பராயன் அவர்களின் 48வது பிறந்தநாள் விழா
சமத்துவம், சமூக நீதி, சுயமரியாதை என போராடி வரும் அவரின் பிறந்த நாளில் ஏழை, எளிய மக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் அப்பகுதியில் மாலை நேர மாணவர்களுக்கு டியூசன் எடுக்கும் வாத்தியார் ஒருவருக்கு ஒரு வருட சன்மானம் 30,000 வழங்கப்பட்டது. மேலும் 50க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அறுசுவை அசைவ உணவு வழங்கப்பட்டது.
விழாவிற்கு நவீன மனிதர்கள் இயக்கத்தின் அமைப்பு செயலாளர் அருண் தலைமை தாங்கினார். மாமன்ற உறுப்பினர் திருமதி வேலம்மாள் விவிஜி காந்தி முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக துணை மேயர் பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவினை தொடங்கி வைத்தார்.
இதில் திமுக 8 வார்டு செயலாளர் வெள்ளைச்சாமி உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி இயக்கத்தின் நிறுவனர்கள், மாவட்ட, மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் நவீன மனிதர்கள் இயக்கத்தின் சார்பில் சுரேஷ், செந்தில், சந்திரசேகர், பிரகாஷ், ராஜா, பால சண்முகம், மனோஜ், அன்புத்தமிழன், முத்தமிழ் அரசு, முனீஸ்வரன்,
பிரதீப், மாரிமுத்து, ஆசிப், சரத், ராஜா, தமிழ் மதி, திவ்யா, பாரதி, ஹேமா, பிரவீன், தோழர் லெனின், வினோத் உள்ளிட்ட நவீன மனிதர்கள் இயக்கத்தின் நிர்வாகிகள், திமுக கழகத்தின் நிர்வாகிகள், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.



