அருமனை, டிசம்பர் 08 –
கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் பாஜக தொண்டர்கள் உயர் நீதிமன்றம் ஆறு படை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலை மேல் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு பிறப்பித்திருந்தை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து அருமனை வடக்கு ஒன்றிய தலைவர் ஹரிஷ்குமார் தலைமையில் சிறுபான்மை அணித் தலைவர் விஜயகுமார், மாவட்ட செயலர் நந்தினி, நகரத் தலைவர் கிருஷ்ணகுமார், பொது செயலாளர் ஆனந்த், வின்சென்ட் ஆகியோர் முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த அருமனை காவல் ஆய்வாளர் வீராசாமி தலைமையில் காவல் துறையினர்
பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத வகையில் போராட்டக்காரர்களை கைது செய்தனர்.



