திருப்புவனம், ஜன. 07 –
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து திருப்புவனத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் ஒன்றிய தலைவர்கள் ராஜ கதிரவன், செல்லராஜா ஆகியோர் தலைமையில் மணிமந்திர விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை செய்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் பாட்டம் நாகராஜன், பட்டியல் அணி மாவட்ட தலைவர் கண்மணி ராஜா, கலைக் கலாச்சாரப் பிரிவு மாவட்ட தலைவர் ஆதித்யா, வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளர் டயானா சிவகுமார், ஆன்மீக பிரிவு மாவட்ட இணை அமைப்பாளர் பிரபு சுப்ரமணி, பொதுச் செயலாளர்கள் முத்திருளு, பிரித்திவிராஜன் மற்றும் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



