கிருஷ்ணகிரி செ 18:
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், அரசம்பட்டியில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் அமைந்துள்ளது. இந்த சக்தி பீடத்தின் திருக்குடமுழுக்கு பெருவிழா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கத் துணைத் தலைவர் கோ.ப.செந்தில்குமார் திருகரங்களால் வெகு சிறப்பாக நடைபெற்றது. கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற இந்த குடமுழுக்கு பெருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சி குருபூஜை உடன் துவங்கியது இரண்டாம் நாள் சக்தி கொடி ஏற்றி, முதற்கால யாக வேள்வி பூஜைகள், இரண்டாம் கால யாக வேள்வி பூஜைகள் அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், அம்மன் பிரதிஷ்டை, போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இறுதி நாளான மூன்றாம் நாள் மூன்றாம் கால யாக வேள்வி பூஜைகளும், இதனைத் தொடர்ந்து ஓம் சக்தியின் வேத மந்திரங்கள் முழங்க, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்க துணை தலைவர் கோ.ப.செந்தில் குமார் அவர்களின் திருகரங்களால் திருக்குடமுழுக்கு நிகழ்ச்சியும், ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது அப்போது பக்தர்கள் ஓம் சக்தி, ஓம் சக்தி என்று முழங்கிய வாசகம் விண்ணை பிளந்தன. இதனைத் தொடர்ந்து மகா அபிஷேகமும், அலங்கார தீபாராதனை, குங்குமப்பிரசாத விநியோகம், உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றது. இந்த குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா நிகழ்ச்சியில் அரசம்பட்டி மற்றும் அருகில் உள்ள கிராமத்தில் உள்ள ஏராளமான பொதுமக்களும் அண்டை மாநிலமான ஆந்திரா, கர்நாடகா, போன்ற பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர். பின்னர் இறுதியாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியை வேள்வி குழு தலைவர் ஓம் சக்தி சுப்ரமணிநைனார், கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் ஓம் சக்தி நடராஜ் ஆகியோர் விழா ஏற்பாட்டை சிறப்பாக செய்திருந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.