மதுரை மார்ச் 15,
மதுரை மாவட்டத்தில் 51 இடங்களில் செயல்பட்டு வரும் முதல்வர் மருந்தகங்களில் இதுவரை 4,288 நபர்கள் மருந்துகள் வாங்கி பயனடைந்த பயனாளிகள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்
தமிழ்நாடு முதலமைச்சர் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும் பொதுமக்கள் தங்களுக்கான மருந்துகளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளதாலும், நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளுக்கு தொடர்ந்து மருந்துகளை வாங்க வேண்டியுள்ளதாலும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர் என்பதை கருத்திற்கொண்டு “முதல்வர் மருந்தகம்” என்ற புதிய திட்டம் மூலம் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்களை கடந்த 24.02.2025 அன்று தமிழ்நாடு முழுவதும் 1000 முதல்வர் மருந்தகங்கள் தொடங்கி வைக்கப்பட்டது. மதுரை மாவட்டத்தில் 51 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் தொடங்கி வைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. முதல்வர் மருந்தகம் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் முனைவோர் சார்பில் 500 மருந்தகங்களும், கூட்டுறவுத் துறை சார்பில் 500 மருந்தகங்களும் என மொத்தம் 1000 மருந்தங்கள் முதற்கட்டமாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், B.Pharm/D.Pharm படித்த பட்டதாரிகள் 1000 நபர்கள் வேலை வாய்ப்பு பெற்று பயனடைந்துள்ளனர். முதல்வர் மருந்தகங்களில் பொதுமக்களுக்கு தேவையான தரமான மருந்துகள் சந்தை மதிப்பைக்காட்டிலும் 75% குறைந்த விலையில் கிடைக்கிறது. முதல்வர் மருந்தகங்களில் ஜெனரிக் பிரான்டட் மருந்துகளும், சித்தா, ஆயுர்வேதம், யுனானி மருந்துகள் மற்றும் சர்ஜிகல் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து மருந்துகளும் 25% வரை தள்ளுபடி விலையிலும் கிடைக்கிறது. மேலும், 51 இடங்களில் செயல்பட்டு வரும் முதல்வர் மருந்தகங்களில் இதுவரை 4.288 நபர்கள் மருந்துகள் வாங்கி பயனடைந்துள்ளனர். எனவே, பொதுமக்கள் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு தங்களுக்கு தேவையான மருந்துகளை மதுரை மாவட்டத்தில் 51 இடங்களில் செயல்பட்டு வரும் முதல்வர் மருந்தகங்களின் வாயிலாக குறைந்த விலையில் பெற்று பயனடையலாம். முதல்வர் மருந்தகங்கத்தில் மருந்துகள் வாங்கி பயனடைந்த திருமோகூர் கிராமத்தை சார்ந்த ராஜம்மாள் தெரிவித்ததாவது:-
என் பெயர் ராஜம்மாள். நான் திருமோகூர் கிராமத்தில் வசித்து வருகிறேன். எனக்கு 58 வயதாகிறது. நான் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருகிறேன். எனக்கு 1 மாதத்திற்கு மருந்துகள் வாங்குவதற்கு குறைந்தது 3 ஆயிரம் ரூபாய் செலவாகும். எங்கள் குடும்பம் வறுமையில் உள்ளதால் என்னால் மாதந்தோறும் 3 ஆயிரம் ரூபாய்க்கு மருந்துகள் வாங்குவதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்தேன். தற்போது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் வாங்கியதில் இந்த மாதம் எனக்கு ரூபாய் 1500 வரை சேமிப்பு ஏற்பட்டுள்ளது. என்னைப் போன்ற பொருளாதாரத்தில் பின்தங்கிய சூழ்நிலையில் உள்ளவர்கள் பயனடையும் வகையில் 1000 முதல்வர் மருந்தகங்கள் தொடங்கி வைக்கப்பட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தொகுப்பு
இசாலி தளபதி எம்.ஏ.
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், மதுரை.
ம.கயிலைச் செல்வம், பி.இ.
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி), மதுரை.