தாம்பரத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் சார்பில் வக்ப் திருத்த சட்டமசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி, சட்ட நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாம்பரம் பேருந்து நிலையம் முன்பு செங்கல்பட்டு வடக்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்ப் திருத்த சட்ட மசோதாவை கண்டித்தும், வக்ப் திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற்ச் வலியுறுத்தி புதிய சட்ட திருத்த மசோதா நகல் எரிப்பு போராட்டம் நடைப்பெற்றது. இந்த போராட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தமிழக அரசு உடனடியாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வக்ப் திருத்த சட்டமசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி சட்டமன்றத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற் வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இந்தநிலையில் ஆர்பாட்டத்தின் போது, திடீரென சட்டமசோதா நகல் எரிப்பில் எஸ்.டி.பி.ஐ.கட்சியினர் ஈடுபட்டதால் போலீசார் அவர்களை தடுக்க முயன்றதால் பரப்பரப்பு ஏற்பட்டது. பின்னர் எஸ்.டி.பி.ஐ.கட்சியினர் சட்ட நகலை கிழித்து எரிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின்
செங்கல்பட்டு வடக்கு மாவட்ட துணை தலைவர் ராஜாமுகம்மது, பொதுசெயலாளர் ரபிக் முகம்மது, மாநில செயற்குழு உறுப்பினர் டேவிட்,
மாவட்ட செயலாளர் கோபி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெங்கட், தாம்பரம் தொகுதி தலைவர் ஷேக் முகம்மது உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.