திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் நகர் ஆயில்மில் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலை முன்பு திமுகவினர் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் அம்பேத்கரை அவமதித்ததாக கூறி ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்ததால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



