மதுரை பிப்ரவரி 4,
மதுரை மாவட்டம் அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலின் திருக்கல்யாண மண்டப வளாகத்தில் பேரறிஞர் அண்ணா நினைவு நாளையொட்டி அறநிலைய துறை இணை ஆணையர் செல்லத்துரை தலைமையில் அறிஞர் அண்ணா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் அறங்காவலர்கள் பாண்டியராஜன், செந்தில்குமார், மீனாட்சி பிரியாந்த், குழுதலைவர் பிரதிநிதி நல்லதம்பி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தீபா தங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு வழிபாடு மற்றும் சுமார் 550 பேருக்கு அறுசுவை பொது விருந்து நடைபெற்றது. திருக்கோயில் சார்பில் நலிவுற்ற பொதுமக்களுக்கு வேட்டி சேலைகள் வழங்கினார்கள். இந்த நிகழ்வில் கண்காணிப்பாளர்கள் பாலமுருகன், பிரதீபா, அருள் செல்வன், பிஆர்ஓ முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.