திருப்பூர் மார்ச் 25,,,
திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கத்தின் முப்பெரும் விழா
சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் , நிறுவனத்தலைவர் பிறந்த நாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சமூகத்தின் நலனுக்கும் நல்வாழ்வுக்கும் பங்களிப்பைச் செய்த பெண் சாதனையாளர்களை அங்கீகரிக்கும் விதமாக பாராட்டு சான்றிதல் வழங்கும் விழா திருப்பூர் போயம்பாளையத்தில் நடைபெற்றது.
பொதுக்குழுவில் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கப்பட்டு பட்டியலை நிறுவனத்தலைவர் ஈ.பி.அ.சரவணன் வெளியிட்டார்,
2024- 2025 ஆண்டிற்கான வரவு செலவு கணக்குகளை பொருளாளர் G.ராஜசெல்வம் தாக்கல் செய்தார்,
கூடுதல் செயலாளர், R.ரமேஷ்குமார், மற்றும் துணைத் தலைவர்,K.M.கணபதி சங்க செயல்பாடுகள் குறித்து சிறப்புரையாற்றினார், சங்க வளர்ச்சி குறித்து சிறப்புரை செயலாளர் C.வெள்ளையப்பன் பேசினார் ,
மாற்றுத்திறனாளிகளுக்கு புடவைகள், அரிசி,பருப்பு, சக்கரை , மளிகை பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
சிறப்பு விருந்தினராக நுகர்வோர் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் நல்லூர் சண்முகசுந்தரம் , KAK.கிருஷ்ணசாமி, சிந்து சுப்பிரமணி, , ஹரிஹரன், நுகர்வோர் அமைப்பு நிர்வாகிகள், மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் ரெங்கசாமி, முத்துச்சாமி, மகேஷ்குமார், கார்த்திகேயன், ஜின்னாபாய், கரைபுதூர் செல்வராஜ், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து இல்லத்தில் சிறப்பு அறுசுவை உணவு விருந்தோம்பல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.