திருப்புவனம்:
மார்ச்:05
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியம் பெத்தானேந்தல்
அருகே உள்ள வைகை ஆற்றுக்குள் சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான அரசுக்கு சொந்தமான கருவேல மரங்கள் வெட்டி விற்பனை செய்யும் சமூக விரோதிகள் உடந்தையாக இருக்கும் அரசு அதிகாரிகள்.
பெத்தானேந்தல் ஊராட்சி, மணல்மேடு அருகே திருட்டுத்தனமாக வைகை ஆற்றுக்குள் கருவேல மரங்களை வெட்டி கடத்துவதாக மணல்மேடு கிராம
பொதுமக்கள் 27.2.2025 அன்று இரவு சுமார் 7 மணி அளவில் திருப்புவனம் தாசில்தார் விஜயகுமாரிடம் போனில் தகவல் தெரிவித்ததாக கூறுகின்றனர். அதன் பின்பு திருப்பாச்சேத்தி வருவாய் ஆய்வாளர் வீரபாண்டி பொதுமக்களிடம் போனில் தொடர்பு கொண்டு முழு விவரத்தையும் பெற்றுக் கொண்டு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தது. திருட்டுத்தனமாக கருவேல மரங்களை வெட்டி கடத்திய லாரியை மடக்கி பிடித்து விசாரணை செய்தார் என்றும் கூறுகின்றனர். ஆனால் வழக்கு பதியவோ, லாரியை பறிமுதல் செய்யவோ இல்லை என்றும் கூறுகின்றனர். வருவாய் ஆய்வாளர் வீரபாண்டி திருட்டுத்தனமாக கருவேல மரங்களை வெட்டி கடத்திச் சென்ற சமூக விரோதிகளிடம் பணம் பெற்று லாரியை விடுவித்தார் என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.
செய்தியாளர் திருப்பாச்சி வருவாய் ஆய்வாளர் வீரபாண்டி அவர்களிடம் போனில் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது பட்டா இடத்தில் தான் விறகு வெட்டினர். என்றும் அரசுக்கு சொந்தமான இடத்தில் அவர்கள் விறகு வெட்டவில்லை என்றும் சமூக விரோதிகளுக்கு ஆதரவாக பதில் கூறினார்.
இது குறித்து பொதுமக்களிடம் கேட்டபொழுது
திருப்புவனம் வைகை ஆற்றை தனி நபருக்கு பட்டா வழங்கியது யார் என கிராம மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது போன்று பெத்தானேந்தல் கண்மாயில் உள்ள கருவேல
மரங்களையும் வெட்டி விற்பனை செய்வதாகவும் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம நிர்வாக உதவியாளர் இருவரும் உடந்தையாக
உள்ளனர் என்றும் கூறுகின்றனர்.
பொதுமக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத திருப்புவனம் தாசில்தார் விஜயகுமார், திருப்பாச்சேத்தி வருவாய் ஆய்வாளர் வீரபாண்டி,கிராம நிர்வாக அலுவலர் பல்லாக்கு கிராம உதவியாளர் புஷ்பலதா ஆகியோர் மீது மாவட்ட ஆட்சியர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மணல்மேடு கிராம பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.