ஆரல்வாய்மொழி, டிச. 25:
வெள்ளமடம் அருகே கையுறை கம்பெனியில் மோட்டார் சுவிட்ச் பாக்ஸில் எலி புகுந்ததால் மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்
வெள்ளமடம் அருகே அனுஷம் என்ற கையுறை கம்பெனி செயல்பட்டு வருகிறது இக்கம்பெனியில் ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்ற நிலையில் பீகார் மாநிலம் கிழக்குசம்ரன் மாவட்டத்தை சார்ந்த அக் ஷய குமார் -24 என்பவர் இந்த கம்பெனிக்கு பீகாரில் இருந்து சுமார் 30 தொழிலாளர்களை அழைத்து வந்து ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணிபுரிந்து வருகிறார் இதில் இவரது சகோதரி பரிமிலாதேவி என்பவர் மகன் பவன்குமார் 19 என்பவரும் இந்த கம்பெனியில் பணிபுரிந்து வருகின்ற நிலையில் பவன்குமார் இக்கம்பெனியின் பின்புறம் உள்ள தோட்டத்தில் பம்பு ஆப்ரேட்டராக வேலை பார்த்து வருகிறார் இவர் இந்த கம்பெனிக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தான் வேலைக்கு வந்துள்ளார்.இந்நிலையில் கடந்த 24-ம் தேதி காலை 8 மணிக்கு வழக்கம் போல் தோட்டத்தில் பணி புரிவதற்காக சென்ற நிலையில் இதேகம்பெனியில் பணிபுரிகின்ற இவரது உறவினர்களான சந்திப்குமார் மற்றும் சுனில் பஸ்வான் ஆகியோர் காலை 9:30 மணிக்கு தோட்டத்தில் உள்ள பம்பு செட் அருகே சென்று பார்த்தபோது பவன்குமார் கைப்பகுதியில் காயத்துடன் எந்தவித அசைவும் இன்றி கீழே விழுந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர் உடனே அவர்கள் இது பற்றி அக் ஷயகுமாருக்கும் கம்பெனி நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் உடனடியாக கீழே விழுந்து கிடந்த பவன்குமாரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்து விட்டார் என தெரிவித்தனர் இதனிடையே இது சம்பந்தமாக ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆரல்வாய்மொழி உதவி காவல் ஆய்வாளர் மகேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் தோட்டத்தில் உள்ள பம்பு செட்டில் மின்சாரம் தாக்கியதாக தெரிய வந்தது அடிப்படையில் அங்குள்ள உள்ள ஸ்விட்ச் பாக்ஸினை திறந்து பார்த்த போது எலி மீது மின்சாரம் பாய்ந்து எலியானது ஸ்விட்ச் பாக்ஸினுள் கருகிய நிலையில் இருந்தது இதனால் மின்சாரம் ஸ்விட்ச் பாக்ஸில் பாய்ந்த நிலையில் பவன்குமார் காலையில் மோட்டர் பம்ப்சுவிட்சியினை போட முயன்ற போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்ததன் அடிப்படையில் ஆரல்வாய்மொழி போலீசார் பவன் குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இச்சம்பவம் பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.