குட்டியாண்டியூரில் மீன் இறங்கு தளம் காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட குட்டியாண்டியூரில் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் புதிதாக கட்டப்பட்ட மீனவர்கள் பயன்படுத்தும் வகையில் 6.83 கோடி மதிப்பீட்டில் மீன் இறங்கு தளம் கடல் அரிப்பை தடுக்கும் திட்ட பணிகளை சென்னையில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார் இந்நிலையில் குட்டியாண்டியூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் மீன் வளத்துறை அதிகாரிகள் மற்றும் குட்டியாண்டியூர் மீனவ பஞ்சாயத்தார்கள் மீனவர்கள் கலந்து கொண்டனர் இதில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் மற்றும் பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள் இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மீனவ மக்களுக்கு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என திட்டங்களை எடுத்துரைத்து பேசினர்.