நாகர்கோவில், ஜூலை – 17,
மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை நூறு நாள் வேலை, ஏ.ஏ.என் ரேசன் கார்டு மற்றும் வாழ்வாதாரம் கோரி நேற்று மாற்று திறனாளிகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டம் மாவட்டத் தலைவர் முகமது புரோஸ்கான் தலைமையில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் நோக்கத்தில் வந்த பொறுப்பாளர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி சுமுகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாமர மூட்டில் நிழலில் அமர வைக்கப்பட்டனர். எனவே மாற்றுத்திறனாளிகள் அந்த இடத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில்அவர்கள் வைத்த கோரிக்கை பின்வருமாறு :- .குமரி மாவட்டத்தில் சுமார் ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் பதினாறு மாதங்கள் மாதாந்திர உதவித் தொகை கேட்டு காத்திருக்கிறார்கள். ஆசாரிப்பள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வாரந்தோறும் சராசரி 20க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் 40 சதவீதத்துக்கு மேல் ஊரத்துக்கான சான்று வழங்கப்படுகிறது. இவர்கள் உதவி தொகை கிடைக்கும் என விண்ணப்பித்து காத்திருக்கிறார்கள். இதில் பெரும்பாலானவர்கள் வேறு எந்த வாழ்வாதாரமும் இல்லாதவர்கள் எனவே இவர்கள் அனைவருக்கும் உதவித்தொகை கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும், குறைவான அளவில் உள்ள ஊரகப்பகுதிகளில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டமும் பயன் அளிக்கவில்லை பெரும்பாலான ஊராட்சிகளின் பணி நடைபெறவில்லை. சட்டப்படியான வேலையின் ஊதியமும் வழங்கப்பட வேண்டும்,மாற்றுத்திறனாளிகள் இடம்பெற்றுள்ள குடும்பங்களுக்கு அன்ன யோஜனா அந்தியோதயா திட்டத்தின் கீழ் மாதம் 35 கிலோ உணவு தானியம் வழங்கிட நடவடிக்கை மேற்கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேலை அல்லது வங்கி கடன் கூறுவோருக்கு முறையாக வழங்கிட வேண்டும். வாகனம் வைத்துள்ள மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் ஓட்டுநர் உரிமம் ஆட்டோ போன்ற தொழில்முறை வாகனங்களுக்கான பயிற்சி வழங்கப்பட வேண்டும். இதற்கான முகாம்களை முன்னறிவிப்பு செய்து நடத்தப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டச் செயலாளர் முருகேசன், மாநில குழு உறுப்பினர் லிட்டில் பிளவர் முன்னிலையில், குமார் சார்லஸ் மனோகர ஜஸ்டாஸ், அருள், சக்திவேல், ஜெயானந்த், தங்க குமார், பவானி, அருள் குமரேசன், பிரகாஷ், சுரேஷ், ஆல்பட்ராஜ், விமல் ராஜ், கிறிஸ்துராஜ், ஜான் சாமுவேல் நாயகி ,மரிய செல்வம், தமிழ்ச்செல்வன் உட்பட ஏராளமான நிர்வாகிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.