By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நடுத்தர மக்களை மின்கட்டண உயர்வு பாதித்துள்ளது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நடுத்தர மக்களை மின்கட்டண உயர்வு பாதித்துள்ளது
கனஂனியாகுமரிமாவட்டம்

நடுத்தர மக்களை மின்கட்டண உயர்வு பாதித்துள்ளது

Last updated: July 19, 2024 12:53 pm
July 19, 2024
116 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஜூலை 19

 

 

 ஏழை நடுத்தர மக்களை மின் கட்டணம் உயர்வு பாதித்துள்ளதாக பாஜக சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் சதீஷ் ராஜா கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சதீஸ் ராஜா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் வீட்டு வரி, சொத்துவரி, தண்ணீர் வரி, பத்திரப்பதிவு கட்டணம் என அனைத்தையுமே தொடர்ந்து உயர்த்தி வருகிறது. அந்தவகையில் இப்போது மின் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. அதிலும் தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற மூன்று ஆண்டு காலங்களில் மூன்றாவது முறையாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

 

திமுக ஆட்சியில் அதிகளவில் வெளியில் இருந்து மின்சாரம் வாங்கப்படுகிறதே தவிர, மின்சார வாரியத்தின் வழியே மின்உற்பத்தியை பெருக்க ஆக்கப்பூர்வமான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வெளியில் இருந்து மின்சாரம் வாங்குவதால் ஏற்பட்ட நிதிச்சுமையை அப்பாவி ஏழை மக்களின் மீது மின் கட்டண உயர்வு என்னும் பெயரில் திணிக்கிறது திமுக அரசு.  

 

எப்போதுமே ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒருபேச்சும், ஆட்சிக்கு வந்த பின்பு ஒரு பேச்சும் பேசுவது திமுகவுக்கு கைவந்த கலை. அதேபோல் எதிர்கட்சி வரிசையில் இருக்கும்போது மின்கட்டணம் ஷாக்கடிக்கிறது என கண்டனம் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், இப்போது தன் ஆட்சியில் ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கிறார். 

 

நாடாளுமன்றத் தேர்தலிலும், அடுத்து நடந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் வெற்றியைத் தந்த மக்களுக்கு திமுக மின் கட்டண உயர்வை பரிசாகத் தந்துள்ளது. இதே திமுக, கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தேர்தல் அறிக்கையில், நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் மாதம் தோறும் மின் கட்டணம் கணக்கீடு செய்யப்படும் என வாக்குறுதி அளித்து இருந்தது. அப்படிக் கணக்கீடு செய்யப்பட்டால், ஏழை, நடுத்தர குடும்பங்களுக்கு நல்ல பலன் கிடைத்திருக்கும். மின் பயனீட்டாளர்களுக்கும், மாதம் தோறும் முதல் 100 யூனிட் இலவச மின்சாரமும் கிடைத்திருக்கும். இன்னொன்று மின் பயன்பாட்டு அளவைப் பொறுத்தே கட்டண விகிதம் அதிகரிக்கிறது. மாதம் தோறும் மின்கட்டணம் கணக்கிடும் போது, மின் பயன்பாட்டு அளவும் குறையும். இதனால் மாதம் தோறும் எளிய மக்களின் பணம் மிச்சமாகும். 

 

ஆனால் திமுகவுக்கு எளிய, விளிம்புநிலை மக்கள் குறித்த சிந்தனை எப்போதுமே இருந்தது இல்லை. வெளியில் இருந்து கொள்முதல் செய்யாமல் மின்சார வாரியத்தின் வழியாகவே, மின் உற்பத்தியைப் பெருக்க தெளிவான திட்டமிடலும் திமுக அரசிடம் இல்லை. மொத்தத்தில் திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையால் தமிழக மக்கள் தினம், தினம் இன்னல்களை அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள். அதற்கு மின்கட்டண உயர்வு சமகால உதாரணம். மக்களின் நியாயமான கோரிக்கையைப் புரிந்துகொண்டு தமிழக அரசு உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தைத் திரும்பப் பெறுவதோடு, மாதம் தோறும் மின்கட்டணம் கணக்கீடு செய்யும் நடைமுறையையும் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.”இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தொண்டியை தனித்தாலுகாவாக அறிவிக்க கோரிக்கை
புனித ஆரோபண அன்னை ஆலய குருத்தோலை
முன்னாள் முதல்வர் ஜெ. பிறந்த நாள் விழா
தடை செய்யப்பட்ட 2 டன் பாலித்தீன் பைகள் பறிமுதல்
நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கு டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

31வது அரசு மாங்கனி கண்காட்சியை தனியாருக்கு சொந்தமான இடத்தில் நடத்த தேமுதிகவினர் கடும் கண்டனம்!

May 28, 2025
49 Views
பெரிய ஏரிக்கரையில் பசுமை தாய்நாடு
விநியோகத் திட்டப் பணிகள் மற்றும் வெப்பச்சலன விழிப்புணர்வு குறித்த ஆய்வுக் கூட்டம்
பாரா தடகள விளையாட்டுப் போட்டி
தமிழகத்தில் மாதம்தோறும் மின்கட்டணம் கணக்கீடு செய்ய வேண்டும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account