நாகர்கோவில் செப் 4
குமரி மாவட்டத்தில் சமீப காலமாக தொடர் சாலை விபத்துகள் ஆங்காங்கே நடைபெற்று வந்தது. இதனை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வதனம் சாலை விதிமுறைகளை கடைபிடிக்காத வாகனங்கள், அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்கள், குடி போதையில் ஒட்டி வரும் வாகனங்கள், சாலையில் நிர்ணயித்த வேகத்தை விட அதி வேகமாக வரும் வாகனங்கள், சட்டத்திற்கு புறம்பாக சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் போன்ற வாகனங்களுக்கு அபராதம் விதித்து பரிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தார்
அவரின் உத்தரவின் பேரில் தக்கலை துணைக் காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன் மேற்பார்வையில் காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களுக்கு அபராதம் வைத்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக தக்கலை முதல் களியக்காவிளை வரை உள்ள சாலைகளில் ஓரத்தில் பொது மக்களுக்கும் போக்குவரத்துக்கும் ஆபத்து ஏற்படும் விதமாக நிறுத்தபட்டிருந்த 45- கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் அனைத்திற்கும் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் காவல்துறையினரின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து விதி மீறல்களில் ஈடுபடும் கனரக வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தக்கலை போக்குவரத்து காவல்துறையினரால் எச்சரிக்கப்பட்டது.