பூதப்பாண்டி – நவம்பர் -09-
குமரி மாவட்டம் பூதப்பாண்டியை அடுத்துள்ள அருமநல்லூர் அம்பட்டை யான் கோணம் பகுதியை சேர்ந்தவர் வினு (29) கூலி தொழிலாளி இவரது தாயாரும் இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் பெயிண்டர் பூமணி (54) என்பவரது மனைவியும் ஓன்றாக சேர்ந்து ஒரே இடத்தில் வேலைக்கு சென்று வருவதாகவும், பூமணிக்கும் அவரது மனைவிக்கு ஏதோ தகராறு ஏற்பட அதற்க்கு வினு வினுடைய அம்மாதான் காரணம் என நினைத்து இவர்களுக்குள் தகராறு இருந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் துவரங்காடு அருகே வினு நின்று கொண்டிருந்ததை பார்த்த பூமணி தான் வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்டியுள்ளார் காயமடைந்த வினு பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் இது குறித்து அவர் பூதப்பாண்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் பூமணி மேல் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்கள்