தமிழகத்தில் தொடரும் கள்ளச்சாராய விற்பனையையும், அதனை தடுத்தவர்களை கொலை செய்த நிகழ்வையும் த.மா.கா வன்மையாக கண்டிக்கிறது
ஜிகே வாசன்.
சென்னை
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் எம்பி இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூர் அருகில் உள்ள முட்டம் என்ற கிராமத்தில் கள்ள சாராய வியாபாரத்தை தடுத்த கல்லூரி மாணவர் மற்றும் ஒரு இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
இந்த சம்பவம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதையே காட்டுகிறது.
அரசு மதுபானக் கடைகளால் ஏற்கனவே சாதாரண அடித்தட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மதுவிற்கு அடிமையாகி பலர் கொலை கொள்ளை, பாலியியல் துன்புறுத்துல் போன்ற பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இன்னிலையில் குடும்ப வருமானத்தையும், உடலையும் கடுமையாக கெடுக்கும் கள்ளச் சாராயத்தை குடித்து பலர் தானும் சீரழிந்து மற்றவர்களையும் துன்பத்திற்குள்ளாக்கும் செயல்தான் தற்பொழுது தமிழகத்தில் அரங்கேறி வருகிறது.
கடந்த வருடங்களில் உதாரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயத்தால் 60 மேற்பட்டவர்களும், விழுப்பும் மாவட்டம் மரக்காணத்தில் 13 பேரும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 3 பேரும் உயிரிழந்துள்ளார்கள்.
மேலும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் பலர் உயிரிழந்துள்ளர்.
தமிழகம் முழுவதும் தொடர்ந்து கள்ளச்சாராயத்தால் உயிரிழப்பும் கொலைகளும் பல்வேறு குற்றச் செயல்களும் அரங்கேறிகொண்டு இருக்கையில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு என்ன செய்து கொண்டு இருக்கிறது. குற்றங்கள் தொடர்வதற்கு மதுவிலக்கு அமலாக்க பிரிவு நீண்ட தூக்கத்தில் இருப்பதையே காட்டுகிறது. போதைப் பொருளை முற்றிலும் தடுப்பதற்கான நடவடிக்கையாக கடந்த 2023 ம் ஆண்டில் போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவையும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவையும் ஒன்றாக இணைத்து “அமலாக்கப் பணியும் -குற்றப்புலனாய்வுத்துறை” என்ற தனிப்பிரிவு உருவாக்கப்பட்டது. ஆனால் அதன் பணி பெயரலவில் கூட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கள்ளச் சாராயம் விற்பனையில் உளவுத்துறையின் பணி முற்றிலும் தோல்வி அடைந்துள்ளது என்பது வருத்திற்குரியது.
தமிழக அரசு இனியும் கால தாதமம் செய்யாமல் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுபவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். ஏற்கவே கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணம் அளித்த தமிழக அரசு, தற்பொழுது கள்ளச்சாராயம் விற்பனையை தடுத்து கொலையானவர்கள் குடும்பத்திற்கு 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், குற்றம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும் அதிகபட்ச தண்டனையை பெற்றுத்தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.