சிவகங்கை:மே:03
தேசிய தேர்வு மையத்தின் (National Testing Agency) மூலம் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு – NEET (UG) 2025 (National Eligibility Cum Entrance Test(UG) வருகின்ற 04.05.2025 அன்று பிற்பகல் 2.00 மணி முதல் 5.20 மணி வரை சிவகங்கை மாவட்டம், சிவகங்கை வட்டத்தில் கேந்திரிய வித்யாலயா மற்றும் அரசு மகளிர் கல்லூரி, காரைக்குடி வட்டத்தில் கேந்திரிய வித்யாலயா மற்றும் அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய நான்கு தேர்வு மையங்களில் மொத்தம் 1,693 மாணவ/ மாணவியர்கள் தேர்வு எழுதவுள்ளனர்.
மேலும், நீட் தேர்வு தொடர்பாக, மாவட்ட நிர்வாகத்திலிருந்து போக்குவரத்து வசதிகள், மருத்துவ வசதிகள், சுகாதார வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதி உள்ளிட்டவைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியர்
ஆஷா அஜித், தெரிவித்துள்ளார்.
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு – NEET (UG) 2025-ற்கென, சிவகங்கை மாவட்டத்தில் 04 மையங்களில் நடைபெறும் .



