அரியலூர், அக்;24
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க, அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில், போக்குவரத்துத் துறையின் சார்பில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப) லிட், திருச்சி மண்டலத்தின் மூலம் BS VI – 03 புதிய புறநகர்ப் பேருந்துகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலன் கருதி எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில், பொதுமக்கள், மகளிர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், மாணாக்கர்கள் உள்ளிட்டோர்களுக்கு அரசு பேருந்து சேவை செயல்பட்டு வருகிறது. அந்தவகையில் நேற்றையதினம், BS VI – 03 புதிய புறநகரப் பேருந்துகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்தார்.
அதன்படி இப்புதிய புறநகரப் பேருந்து எண்.TN45/N-4485 (1 to 1) ஜெயங்கொண்டத்தில் இருந்து புறப்பட்டு பொய்யூர் வழியாக திருச்சியை சென்றடையும். திருச்சியிலிருந்து புறப்பட்டு பொய்யூர் வழியாக ஜெயங்கொண்டம் வந்தடையும். புறநகரப் பேருந்து எண்.TN45/N-4538 (1 to 1) ஜெயங்கொண்டத்தில் இருந்து புறப்பட்டு பொய்யூர் வழியாக திருச்சி சென்றடையும். திருச்சியிலிருந்து புறப்பட்டு பொய்யூர் வழியாக ஜெயங்கொண்டம் வந்தடையும். புறநகரப் பேருந்து எண்.TN45/N-4518 ஜெயங்கொண்டத்தில் இருந்து புறப்பட்டு திருச்சி, கரூர் வழியாக திருப்பூர் சென்றடையும். திருப்பூரில் இருந்து புறப்பட்டு கரூர், திருச்சி வழியாக ஜெயங்கொண்டம் வந்தடையும் வகையில் நேற்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் துணை மேலாளர் வணிகம் சாமிநாதன், கோட்ட மேலாளர் இராமநாதன், ஜெயங்கொண்டம் கிளை மேலாளர் ராம்குமார், ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் சம்பத்குமார், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்