தி.வ.மலை பிப்ரவரி 24.
திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் காஞ்சிபுரம் தென்னிந்தியா திருமண அமைப்பாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட தலைவரை தேர்ந்தெடுக்கும் கூட்டம் மாநிலத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரின் பேராதாரவுடன் ஒருமனதாய் தீர்மானம் செய்யப்பட்டு
திருவண்ணாமலை மாவட்டத்தின் தலைவராக எஸ்.எஸ் ஏழுமலை என்பவர் நியமிக்கப்பட்டார்.
இக்கூட்டத்தில் பொருளாளர் கோகிலா துணைத் தலைவர் மணி,மாவட்டச் செயலாளர் சாலை பிரம்மாகாத்,
மாவட்டத் துணைத் தலைவர் நாராயணசாமி,துணைச் செயலாளர்கள் கண்ணன். உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு மாவட்டத் தலைவர் ஏழுமலை என்பவருக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தி வாழ்த்து தெரிவித்தனர்.