நாகர்கோவில் – நவ- 04,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரியில் வைத்து கன்னியாகுமரி மாவட்டம் மல்யுத்த சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இப் போட்டியில் சுமார் 300 வீரர்கள் கலந்து கொண்டனர். 12- வயது முதல் 20 வயது வரை உள்ள வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியினை கன்னியாகுமரி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர். ராகவன் மல்யுத்த போட்டியினை தொடங்கி வைத்தார். இதில் மாணவரணி செயலாளர் பால்ராஜ், தெற்கு பகுதி செயலாளர் நாகராஜ், 51 வது வட்டச் செயலாளர் பிரதீஷ், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் ஸ்ரீகுமார் மற்றும் அமமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் பள்ளி , கல்லூரி மாணவர்கள் மற்றும் அவரது பெற்றோர்கள் , மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு , பாராட்டு சான்றிதழ்களும், விருதுகளும் வழங்கப்பட்டது.