மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை அடுத்த மணக்குடி கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான , ,பிரசித்தி பெற்ற நல்ல நாயகி அம்மன் கோயில், மற்றும் பொறையான் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் ஆண்டு பங்குனி பெருவிழா கடந்த இரண்டாம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் எட்டாம் திருநாளான இன்று தேர்த்திருவிழா நடைபெற்றது. அம்மன் சர்வ அலங்காரத்தில் தேருக்கு எழுந்தருளினார். சக்கரங்கள் இல்லாத இரண்டு தேர்களை பக்தர்கள் தோளில் சுமந்துவர, மணக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு பக்தர்களுக்கு தோளில் தேரை சுமந்து சென்றனர். வீடுகள் தோறும் படையல் இட்டு அம்மனுக்கு பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். தொடர்ந்து ஆலயத்தில் மாவிளக்கு தீபமிட்டும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தும் அம்மனுக்கு வழிபாடு செய்தனர். இதில் பாரதிய ஜனதா கட்சி எஸ் டி எம் செந்தில், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எம் ரங்கநாதன், கே ரமேஷ், மணக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சார்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தேர் திருவிழாவை கண்டு ரசித்து அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.



