அரியலூர்,ஜூன்:02
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் மக்களவை பொதுத் தேர்தல் 2024 27-சிதம்பரம் (தனி) பாராளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை வாக்குஎண்ணும் மையமான தத்தனூர் மீனாட்சி இராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 04.06.2024 அன்று நடைபெறுவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது.
27-சிதம்பரம் (தனி) பாராளுமன்ற தொகுதியில் நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் மேற்க்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
நடைபெற்று முடிந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை 04.06.2024 அன்று காலை 8.00 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணி முதலில் தொடங்கு மெனவும் அதனை தொடர்ந்து 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும் என்றும் தெரிவித்தார். 31.05.2024 வரை 9388 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளதாகவும், ETPBMS தபால் வாக்குகள் 601 பெறப்பட்டுள்ளதாகவும் 04.06.2024 அன்று காலை 8.00 மணிவரை பெறப்பட்ட தபால் வாக்குகள் மட்டுமே வாக்கு எண்ணிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
தபால் வாக்கு எண்ணிக்கையில் மேஜைக்கு ஒரு மேற்பார்வையாளர், 2 உதவியாளர்கள் என 30 அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதோடு கண்காணிப்பு பணியில் 10 நுண்பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் தபால் வாக்குகள் எண்ணிக்ககைக்கு என 10 கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
27-சிதம்பரம் (தனி) பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு 23 சுற்றுகளும், அரியலூர் சட்டமன்ற தொகுதிக்கு 22 சுற்றுகளும், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கு 21 சுற்றுகளும், புவனகிரி சட்டமன்ற தொகுதிக்கு 21 சுற்றுகளும், சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்கு 19 சுற்றுகளும், காட்டுமன்னார் கோவில்(தனி) சட்டமன்ற தொகுதிக்கு 18 சுற்றுகளாகவும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
மேலும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்கு எண்ணும் அறையிலும் 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளதோடு ஒவ்வொரு மேஜையிலும் ஒரு மேற்பார்வையாளர், 2 உதவியாளர்கள் மற்றும் 1 நுண்பார்வையாளர் என மொத்தம் 56 அலுவலர்கள் பணியமர்;த்தப்பட்டுள்ளனர். 27-சிதம்பரம் (தனி) பாராளுமன்ற தெ;hகுதிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் வாக்கு எண்ணும் பணியில் மொத்தம் 336 அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
சுற்றுகள் வாரியான வாக்கு எண்ணிக்கை நிலவரம் ஒவ்வொரு வாக்குஎண்ணும் அறையிலும் அனைவருக்கும் தெரியும் வகையில் பதாகையில் எழுதப்படுவதோடு பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் ஒவ்வொரு சுற்றுகளின் முடிவுகளும் தெரிவிக்கப்படும்.
வாக்கு எண்ணும் பணியின் போது சட்டம் மற்றும் ஒழுங்கினை கண்காணித்திட நில அளவை துணை ஆய்வாளர் நிலையில் 4 சிறப்பு நிர்வாக நடுவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் எனவும் இது தவிர காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் என 880 காவல்துறையினர்; பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளர்.
வாக்கு எண்ணுகைக்காக வேட்பாளர்களால் 995 முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்குகள் எண்ணும் மையத்திற்குள் பணிபுரிய உள்ள அலுவலர்கள் மற்றும் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர் முகவர்கள் கைப்பேசி எடுத்து வர அனுமதி இல்லை என்றும், செய்தியாளர்கள் ஊடக மையத்திற்குள் மட்டும் கைப்பேசிகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றம் தெரிவித்தார்.
தொடர்ந்து, வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை, கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறை, வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காணிப்பு அறை ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கான எடுக்கப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு, பணியில் ஈடுபடவுள்ள பணியாளர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்தார். வாக்கு எண்ணிக்கைக்கு அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மேசைகள், வாக்கு எண்ணிக்கை கண்காணிக்கும் முறையில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுக்கள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பாதுகாப்பிற்கான குறிப்பேட்டு பதிவுகளை பார்வையிட்டு பதிவேட்டில் கையொப்பமிட்டார். மேலும், வாக்கு எண்ணும் மையத்தில் போதிய முன்னேற்பாடுகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதோடு அமைதியான முறையில் வெளிப்படைத் தன்மையுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்க்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா கையெழுத்திட்டார்.
இந்த ஆய்வின்போது, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயராகவன், வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் (அரியலூர்), ஷீஜா (உடையார்பாளையம்), அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.