பூதப்பாண்டி – மே – 11-கன்னியாகுமரி மாவட்டத்தில் இயற்கை எழில் மிகுந்த காளிகேசத்தில் உள்ள காளிஅம்மன் கோவிலில் (நாளை)மே 12ம் தேதி திங்கட்கிழமை சித்ரா பௌர்ணமி பூஜை விழா வெகு சிறப்பாக நடைபெற இருக்கிறதுஅன்று காலை 7.00 மணிக்கு பக்திஇசையும்9.00 மணிக்கு ராஜமேளமும்9.30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும்
பகல் 10.30 மணிக்கு உலக நன்மைக்காக பரசேரி சியாமளா விஸ்வேஸ்வரன் தலைமையில் லலிதா சகஸ்ரநாம பூஜையும்12.00 மணிக்கு நாதஸ்வர மேளமும்மதியம் 1.00 மணிக்கு அலங்கார தீபாராதனையும்மதியம் 1.30 மணிக்கு அன்னதானம்அதனை தொடர்ந்து பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சிகள் வெகு நடைபெறுகிறது
பௌர்ணமி பூஜையை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து காளிகேசத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது பக்தர்கள் அதை பயன்படுத்தி கொள்ளுமாறும் கேட்டு கொள்கிறார்கள்விழாவிற்கான ஏற்ப்பாடுகளை காளிகேசம் அருள்மிகு காளிஅம்மன் கோவில் சேவா அறக்கட்டளை நிர்வாககுழு மற்றும் பௌர்ணமி பூஜை வழிபாட்டு குழுவினரோடு பக்தர்களும் செய்து வருகின்றனர்



