மதுரை ஏப்ரல் 18
மதுரை அவனியாபுரம் நாகப்பா நகரைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் வேலை முடித்து
04.04.2025 இரவு
வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது அவரது வீட்டிற்கு அருகே மறைந்திருந்த நபர் ஒருவர் இளம் பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த வெள்ளி மூலம் பூசப்பட்ட செயினை வழிப்பறி செய்தது சம்பந்தமாக அவனியாபுரம் காவல்நிலைத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு புலன் விசாரணையில் இருந்தது.
இந்நிலையில் அவனியாபுரம் காவல் துறையினர் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமராக்கள் செல்போன் டவர் பதிவுகள் மற்றும் சிறையில் இருந்து வெளிவந்த குற்றவாளிகளின் விவரங்களை ஆய்வு செய்து மேற்படி குற்றவாளியை தேடி வந்த நிலையில் மண்டேலா நகர் அருகில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த மதுரை வலையங்குளத்தைச் சேர்ந்த நல்ல மருது என்பவரின் மகன் நல்லு முருகன் வயது 23 என்பவரை விசாரிக்கையில் செயின் பறிப்பு வழக்கில் சம்பந்தப்பட்டு இருப்பது தெரிய வரவே அவரை கைது செய்து மண்டேலா நகர் சின்ன உடைப்பு அருகில் மண்ணில் புதைத்து வைத்திருந்த செயினை கைப்பற்றிய போது காவலர்கள் பிடியிலிருந்து தப்பிக்க சாலையின் அருகே இருந்த பாலத்தில் இருந்து குதித்து தப்பித்து ஓட முயற்சித்த போது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக
காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.