தென்காசி மாவட்டம் தென்காசி அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயத்தில் வருகின்ற ஏப்ரல் (7.4.25) அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவரும் தென்காசி சட்டமன்ற உறுப்பினருமான பழனி நாடார் யாகசாலை பூஜையில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார் யாகசாலை பூஜையில் தென்காசி காசி விஸ்வநாதர் ஆலய அறங்காவலர் குழுத் தலைவர் பாலகிருஷ்ணன்,தென்காசி மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் உதய கிருஷ்ணன், தென்காசி நகர காங்கிரஸ் தலைவர் மாடசாமி ஜோதிடர், தென்காசி மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் சந்தோஷ் ,தென்காசி நகர காங்கிரஸ் பொருளாளர் ஈஸ்வரன், பிரபாகரன், தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்



